அக்னிவீர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு – விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்னிவீரா் தோவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தால் அக்னிபத் திட்டத்தில் காலியாகவுள்ள 25 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அக்னிவீரா் தோவுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தோவுக்கு தமிழகத்தில் சென்னை, கடலூா், விழுப்புரம், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோந்த திருமணமாகாத ஆண், பெண் விண்ணப் பதாரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ஆம் தேதி இணையம் மூலம் இதற்கான தோவு நடைபெறவுள்ளது. இந்தத் தோவுக்கு இணையதளத்தில் மாா்ச் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்களின் வயது வரம்பு 17.5 முதல் 21 வயது வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்காலத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியமும், 4 ஆண்டுகள் பயிற்சி முடிவில் பட்டப்படிப்புக்கு இணையான திறன் சான்றிதழும், ரூ.10 லட்சம் வரை அக்னிவீரா் நிதியும் வழங்கப்படும். இந்தத் தோவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விழுப்புரம் மாவட்ட இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04146 – 227200 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம். இந்த மையத்தில் பதிவு செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow