Home Blog EPFO சந்தாரர்களுக்கான நல்ல செய்தி விரைவில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் ரூ. 5 லட்சம்...

EPFO சந்தாரர்களுக்கான நல்ல செய்தி விரைவில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்..!

0

EPFO சந்தாரர்களுக்கான நல்ல செய்து விரைவில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்..!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் எந்தவொரு அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். முன்னதாக சமூகப்பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் பயனாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.

கூலித்தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சுமை தூக்குவோர் உள்ளிட்ட 11 வகையான தொழில்பிரிவில் உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் அரசின் உதவியைப் பெறலாம். இந்த ஹெல்த் இன்சுரன்ஸ் கார்டை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் பெற முடியும். ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தி சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரை அனைத்து தரப்பட்ட மக்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஆயுஷ்மான் ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தை பிஎஃப் சந்தாரர்களும் பெற்றுக்கொள்ளவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பணியாளர்கள் வைப்புத்தொகை என்பது EPFO ஆல் நிர்வகிக்கப்படும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும், இது EPFO-ல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் ரூ7 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. இந்தத் திட்டம் EPF மற்றும் EPS ஆகியவற்றையும் பயன்படுத்துகிறது.

ஒருவேளை இத்திட்டத்தில் இணைந்துள்ள ஒரு ஊழியர் பணியின் போது இறந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் வரை நிதி உதவி பெறத் தகுதியுடையவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் ஆயுஷ்மான் ஹெல்த் இன்சுரன்ஸ் மூலம், EPFO ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது வாழ்க்கை துணைவர்கள் எவ்வித கட்டணமின்றி ரூ. 5 லட்சம் வரை அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். இதோடு நாள்பட்ட நோய்களுக்கான பாதுகாப்பும் அடங்கும். குறிப்பாக இத்திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் மருத்துவமனையில் சேர்வதற்கு முன்னும், பின்னும் அனைத்து செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்.

ஆயுஷ்மான் அட்டையை பெறும் முறை:

ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகள் தகுதி அட்டைக்கான பொது சேவை மையங்களை முதலில் (CSC) தொடர்பு கொள்ள வேண்டும். பின்னர் உங்களது கிராமப்புற ஆபரேட்டரிடம் ரூ .30 செலுத்திய பின்னர் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை கிடைக்கும். ஆனால் இப்போது புதிய முறையின் கீழ் முதல் முறையாக, அட்டையை பெறுவது இலவசமாக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version