HomeBlogதமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – இருசக்கர வாகன ஆலை

தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – இருசக்கர வாகன ஆலை

 

தமிழகத்தில் 10 ஆயிரம்
பேருக்கு வேலைவாய்ப்பு இருசக்கர வாகன ஆலை

தமிழகத்தில் ஓலா நிறுவனம் உலகத்திலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன
ஆலையை அமைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி
செய்ய கடந்த வாரம்
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில்,
தற்போது அதற்கான பணிகள்
தொடங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 10 ஆயிரம்
பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஊரடங்கு
காலத்தில் அதிகளவில் தொழில்
முதலீடுகளை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
அதில் ஒன்றாக கடந்த
வருடம் டிசம்பர் மாதத்தில்
ஓலா நிறுவனத்துடன் தமிழக
அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி
உலகின் மிகப்பெரிய இருசக்கர
வாகன உற்பத்தி ஆலை
தமிழகத்தில் நிறுவ முடிவு
செய்யப்பட்டது. இது
500
ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை
தற்போது அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

ரூ.2,400/-
கோடி முதலீட்டில் கட்டப்பட
உள்ள இந்த ஆலைக்கான
நிலம் கையகப்படுத்தும் பணிகள்
கடந்த ஜனவரி மாதம்
முடிவடைந்தது. தற்போது
ஆலை கட்டமைப்பு பணிகளை
ஓலா நிறுவனம் முடுக்கி
விட்டுள்ளது. அதன்படி அடுத்த
சில மாதங்களில் முதல்கட்ட
உற்பத்தி தொடங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதன்
மூலம் ஆண்டு ஒன்றுக்கு
20
லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular