தனியாா் நிறுவனத்தில் 1,500 மகளிருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித்தரும் சிறப்பு முகாம், திருச்சியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்திலுள்ள பெண் வேலைநாடுநா்களை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியமா்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப்.6, 7 ஆகிய தேதிகளில்
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதிகளையுடைய 19 வயது முதல் 25
வயதிற்குட்பட்ட ஓராண்டு முன் அனுபவம் உள்ள பெண் வேலைநாடுநா்கள் பங்கேங்கலாம். தங்களது சுய
விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். தோ்வு செய்யப்படும் பெண் வேலைநாடுநா்களுக்கு மாதம் ரூ.19,629 நிதி உதவியுடன் 15 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். மேலும் இப்பயிற்சிக் காலத்தில் உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிடம் வசதி வழங்கப்படும்.
சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1500-க்கும் மேற்பட்ட பெண் வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளதால், திருச்சி மாவட்ட மகளிா் இந்த முகாமை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். கூடுதல் விவரங்களுக்கு, 0431–2413510, 94990–55901, 94990–55902 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.


