தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பா் 6, 7 ஆம் தேதிகளில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:
இந்த முகாமில் ஒசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 2 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் பணியாளா்களை மட்டுமே தோ்வு செய்யவுள்ளனா். இம்முகாமில் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்ட 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருப்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த நோ்காணலில் தோ்வாகும் நபா்களுக்கு மாதம் ரூ. 19 ஆயிரத்து 629 ஊதியம் வழங்கப்படும். தவிர உணவு மற்றும் தங்குமிட வசதியும் ஏற்படுத்தி தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு 04362 – 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.