எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் ஒருங்கிணைந்த பி.இ. படிப்பிற்கு ஜூலை 26 வரை விண்ணப்பிக்க அவகாசம்
எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் ஒருங்கிணைந்த பி.இ., படிப்பிற்கு ஜூலை 26ம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம்.இந்த கல்வியாண்டு 2023-24 க்கான ஒருங்கிணைந்த பி.இ., படிப்பிற்கு ஜூன் 26ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் படிப்பை காஞ்சிபுரம், யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், ஹேல் மேண்டோ ஆனந்த் ப்.லிட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 25. 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு அல்லது டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவையுடன், உரிய கட்டணத்துடன் விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், என அண்ணா பன்கலை., அறிவித்துள்ளது.