TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
சிறு, குறு
விவசாயிகளுக்கு மானிய
விலையில் மின்மோட்டார் ராமநாதபுரம்
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக
அரசு மானியத்துடன் கூடிய
நீா் இறைக்கும் மின்மோட்டார் திட்டத்தை வேளாண்மை தொழில்நுட்பப் பிரிவு மூலம் செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3 ஏக்கருக்கும் குறைவான
விவசாயிகள் இந்தத் திட்டத்தில் சோந்து பயனடையலாம்.
திட்டத்தில் சேர விரும்புவோர் சிறு,
குறு விவசாயிகளுக்கான சான்று,
அடங்கல், 10-1 என்ற சான்று,
நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை
ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம்
மற்றும் திருவாடானை ஆகிய
வட்டார விவசாயிகள், ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை உதவி
செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பரமக்குடியில் உள்ள
அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here