HomeBlogதமிழகத்தில் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு தேர்தல் பணி

தமிழகத்தில் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு தேர்தல் பணி

 

தமிழகத்தில் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு தேர்தல்
பணி

தமிழக
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 & வாக்கு
எண்ணிக்கை May மாதம்
2
ஆம் தேதி நடைபெறும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்
பட்டியல், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு,
தேர்தல் அறிக்கை என
தமிழக அரசியல் களம்
தீவிரமடைந்துள்ளது. மேலும்
தேர்தல் பணியில் ஈடுபட
உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல்
பணிக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பின்படி:

தேர்தல்
பணிகளில் ஈடுபட விருப்பமுள்ள ஓய்வுபெற்ற 65 வயதிற்கு உட்பட்ட
காவலர்கள் பதிவு செய்யலாம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் சிறப்பு
காவலர்களாக பணியாற்றிட அழைக்கப்படுகின்றனர்.

இதற்காக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள
தேர்தல் பிரிவில் விருப்ப
கடிதத்தை அளித்து வாக்காளர்
அடையாள அட்டை ஆகியவற்றின் 2 நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள்
அறிய ராணிப்பேட்டை மாவட்ட
தேர்தல் பிரிவை 04172 – 290871 அல்லது
9790648992
ஆகிய எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular