HomeNewslatest newsசிறுதானிய உணவுப் பொருட்கள் Training 2026 🌾 EDII-TN Govt Certificate Course!

சிறுதானிய உணவுப் பொருட்கள் Training 2026 🌾 EDII-TN Govt Certificate Course!

சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளில் உணவுப் பொருட்கள் தயாரிக்க 2 நாள் பயிற்சி!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் EDII-TN மூலம், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான 2 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சென்னைல் நடைபெற உள்ளது.

சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு, value added food products, packaging, marketing, government schemes போன்றவற்றை கற்றுக்கொள்ள விரும்பும் இளைஞர்கள் மற்றும் தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது நல்ல வாய்ப்பு.

Training Details

பயிற்சி பெயர்: சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி
நிறுவனம்: EDII-TN, Government of Tamil Nadu
பயிற்சி நாட்கள்: 15.07.2026 முதல் 16.07.2026 வரை
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: EDII-TN Campus, SIDCO Industrial Estate, Ekkattuthangal, Chennai – 600032
முன்பதிவு: அவசியம்
சான்றிதழ்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்
Contact: 8668102600 / 7806918309

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த பயிற்சியில் என்ன கற்றுக்கொள்ளலாம்?

இந்த பயிற்சியில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்கப்படும்.

குறிப்பாக, இயற்கையான பொருட்களை பயன்படுத்தி தினை, சோளம், சாமை, வரகு, குதிரைவாலி, கருப்பு கவுனி போன்ற ஆரோக்கிய உணவுப் பொருட்களை எப்படி தயாரிப்பது என்பது பற்றி விளக்கப்படும்.

மேலும், தயாரிப்பு சந்தைப்படுத்துதல், packaging, labeling, விலை நிர்ணயம், அரசு உதவிகள் மற்றும் மானியங்கள் போன்ற தொழில் தொடர்பான முக்கிய தகவல்களும் வழங்கப்படும்.

பயிற்சியில் அறிமுகப்படுத்தப்படும் உணவுப் பொருட்கள்

இந்த பயிற்சியில் கீழ்க்கண்ட வகை சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி உணவுப் பொருட்கள் குறித்து அறிமுகம் அளிக்கப்படும்:

  • அரிசி மாவு லட்டு
  • தினை நாட்டு சர்க்கரை பூந்தி லட்டு
  • கருப்பு கவுனி அல்வா
  • கேழ்வரகு மைசூர் பாக்
  • பூங்கார் அரிசி முறுக்கு
  • தினை ஜம்பொடி
  • குதிரைவாலி சீவல்
  • வரகு பீச்சர்
  • சோளம் காராசேவ்
  • சாமை பட்டர் முறுக்கு
  • வரகு காராபூந்தி
  • கம்பு முறுக்கு வகைகள்

யாரெல்லாம் Apply செய்யலாம்?

இந்த பயிற்சியில் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் / திருநம்பிகள் கலந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர்:

  • 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • உணவு தயாரிப்பு / சிறு தொழில் தொடங்க ஆர்வம் இருக்க வேண்டும்

பயிற்சியில் பங்கேற்கும் நபர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி தேவைக்கு ஏற்ப கிடைக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த Training யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?

சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரித்து வீட்டிலிருந்து business தொடங்க விரும்பும் பெண்கள், இளைஞர்கள், job seekers, small food business owners, SHG members, home-based entrepreneurs ஆகியோருக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது healthy snacks, millet foods, traditional rice products போன்றவற்றுக்கு சந்தையில் demand அதிகரித்து வருகிறது. அதனால் இந்த பயிற்சி மூலம் புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஏன் இது முக்கியம்?

சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் உடல்நலத்திற்கு நல்லவை என்பதால், மக்கள் மத்தியில் இத்தகைய உணவுப் பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இந்த training மூலம் ஒரு சாதாரண food idea-வை marketable product ஆக மாற்றுவது எப்படி, packing செய்து விற்பனை செய்வது எப்படி, அரசு திட்ட உதவிகளை பெறுவது எப்படி போன்ற practical business knowledge கிடைக்கும்.

எப்படி Register செய்வது?

பயிற்சியில் சேர விரும்புவோர் www.editn.in என்ற official website மூலம் பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை கீழ்க்கண்ட numbers-ஐ தொடர்பு கொள்ளலாம்.

Contact Numbers: 8668102600 / 7806918309

Address:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
SIDCO Industrial Estate, EDII Office Road,
Ekkattuthangal, Chennai – 600032.

Source: TN DIPR Press Release No. 368, Date: 09.07.2026
Official Website: https://www.editn.in
DIPR Website: https://www.dipr.tn.gov.in

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular