போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்ப
வேண்டாம் – வருமான வரித்துறை
எச்சரிக்கை
போலி
நியமன ஆணைகள் மூலம்
வேலை வாய்ப்பு வாங்கி
தருவதாக விளம்பரம் செய்யும்
நபர்களை நம்ப வேண்டாம்
என்று வருமான வரித்துறை
எச்சரித்துள்ளது. நாட்டில்
வேலைவாய்ப்பு இல்லாமல்
இளைஞர்கள் தவித்து வரும்
நிலையில், வருமான வரித்துறை
உள்ளிட்ட பல்வேறு அரசு
துறைகளில் வேலைவாய்ப்பு வாங்கி
தருவதாக விளம்பரம் செய்து,
போலி பணி நியமன
ஆணைகள் கொடுத்து பண
மோசடியில் ஈடுபடும் சம்பவம்
அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
வருமான
வரித்துறையில் சேருவதற்காக போலி நியமன கடிதங்களை
வழங்குவதன் மூலம் வேலை
தேடுபவர்களை தவறாக வழிநடத்தும் மோசடி நபர்களுக்கு இரையாக
வேண்டாம்.அனைத்து குரூப்
பி மற்றும் சி
பதவிகளுக்கான நேரடி
ஆட்சேர்ப்பு பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) நடத்தப்படுகிறது.
இது
தொடர்பான அறிவிப்பு மற்றும்
முடிவுகள் பணியாளர் தேர்வு
ஆணையம் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பிறகு, பிராந்திய
ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்வானவர்கள் பட்டியல் வருமான வரித்துறை
போர்ட்டலில் பதிவேற்றப்படும். பணியாளர்
தேர்வு ஆணையம் மற்றும்
வருமான வரித் துறையின்
அதிகாரப்பூர்வ இணையதளங்கள் தவிர வேறு எந்த
தளம் மூலம் வெளியிடப்படும் விளம்பரங்களை நம்ப
வேண்டாம்.