Home Blog பனியன் கழிவு மூலம் மிதியடி தயாரிப்பு குறித்து நேரடி பயிற்சி

பனியன் கழிவு மூலம் மிதியடி தயாரிப்பு குறித்து நேரடி பயிற்சி

0

பனியன் கழிவு மூலம் மிதியடி தயாரிப்பு குறித்து நேரடி பயிற்சி

பனியன் கழிவு மூலம் மிதியடி தயாரிப்பு குறித்து நேரடி பயிற்சி தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்படஇருக்கிறது. 

இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

மிதியடி தயாரிப்பு குறித்து பயிற்சி

 தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக வாரம் ஒரு முறை தொழில் பயிற்சிகளை நடத்தி வருகிறது. அத்துடன் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சிறு தொழில் செய்து பணம் ஈட்டும் விதமாகவும் நேரடியாக தொழில் பயிற்சி அளிக்க உள்ளோம். 

அதன் அடிப்படையில் இந்த வாரம் பனியன் கழிவு மூலம் வீட்டில் உபயோகப்படுத்தும் மிதியடி தயாரிப்பு குறித்த பயிற்சி நேரடியாக தேர்ந்தெடுத்த வல்லுனரை கொண்டு நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியை கற்றுக் கொண்ட பின்பு, இதனை வீட்டில் இருந்தே தயாரிக்கலாம். சிறிய முதலீடு, குறைந்த இடம் போதுமானது. இதற்கு மின்சாரம் தேவை இல்லை. குறுந்தொழிலாக செய்ய விரும்பும் பெண்களுக்கு கடனுதவி மானியத்துடன் வழிகாட்டப்படும். 

பதிவு செய்து கொள்ள வேண்டும் 

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய ANDROID PHONE form.wewatn.com/+918939038425 என்பதன் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். 

மேலும் பனை சார்ந்த பொருட்கள் தயாரிப்பவர்கள் எங்களை 9176163425 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விற்பனை செய்து பயன்பெறலாம். 

மேலும் பெண்கள் தங்களது அனைத்து தயாரிப்புகளையும், தாங்கள் வாங்கிவிற்கும் பொருட்களையும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கு எந்தவித கட்டணமுமின்றி சங்கம் மூலமாக ஏற்பாடு செய்துள்ள https://rebrand.ly/Eshopee என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். அனைத்து மாவட்டங்களிலும் பலவிதமான நேரடி தொழிற்பயிற்சி கூடியவிரைவில் அளிக்கப்படவுள்ளதால் பயிற்சி எடுக்க விரும்புபவர்கள் மற்றும் பயிற்சி வல்லுனர்கள் தங்களுடைய விவரங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் அவர்கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version