ஆசிரியர் பணியிடம்
நிரப்புவதில் தாமதம்
பள்ளி
கல்வித்துறை சார்பில் அரசு
பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும்
இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல்,
பதவி உயர்வு உள்ளிட்ட
பொது பணியிட மாறுதல்
கலந்தாய்வுகள் நடந்து
வருகிறது.
ஆனால்,
கடந்த பிப்., 11, 12 ஆகிய
தேதிகளில் நடக்கவிருந்த முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு மட்டும், கோர்ட்
உத்தரவின்படி, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால்,
தமிழக அரசு மேல்நிலை
பள்ளிகளில் காலியாக உள்ள,
முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு
தேசிய ஆசிரியர் சங்க
பொதுசெயலாளர் கந்தசாமி
கூறுகையில், முதுநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் அளித்து,
இதன்மூலம் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு
அடிப்படையில் பட்டதாரி
ஆசிரியர்களை நிரப்பும்பட்சத்தில், மேல்நிலை
வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கிடைப்படர்.
கற்பித்தல்பணி சீராக இருக்கும். பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களும் எளிமையாக தயாராவர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.