Home Blog பள்ளி மாணவா்களுக்கு ஏப்ரல் 28ல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் – ஈரோடு

பள்ளி மாணவா்களுக்கு ஏப்ரல் 28ல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் – ஈரோடு

0

Corona Vaccination Special Camp for School Students on April 28 - Erode

பள்ளி மாணவா்களுக்கு ஏப்ரல் 28ல் கரோனா
தடுப்பூசி சிறப்பு முகாம்ஈரோடு

ஈரோடு
மாவட்டத்தில் பள்ளி
மாணவா்களுக்கு ஏப்ரல்
28
ல் கரோனா தடுப்பூசி
சிறப்பு முகாம் நடைபெற
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா பரவுதலை தடுக்கும்
பொருட்டு அனைவருக்கும் தடுப்பூசி
எனும் இலக்குடன் இல்லம்
தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஈரோடு
மாவட்டத்தில் பள்ளி
மாணவா்களுக்கு தடுப்பூசி
செலுத்தும் திட்டத்தில் 12 முதல்
14
வயதுடைய மாணவா்களுக்கு

முதல்
தவணையாக 44,710 தடுப்பூசிகள், இரண்டாம்
தவணையாக 13,268 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

15 முதல்
18
வயதுடைய பள்ளி மாணவா்களுக்கு முதல் தவணையாக 89,373 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 77,321 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு
மாவட்டத்தில் பள்ளி
மாணவா்களுக்கு கரோனா
தடுப்பூசி செலுத்தும் சிறப்பு
முகாம் ஏப்ரல் 28 ஆம்
தேதி நடைபெறவுள்ளது.

இதில்,
இரண்டாம் தவணை கரோனா
தடுப்பூசி செலுத்த வேண்டிய
பள்ளி மாணவா்களுக்கும், இதுவரை
தடுப்பூசி செலுத்தாத மாணவா்களுக்கும் அவா்கள் படிக்கும் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version