HomeBlogகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு 2021

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு 2021

 

Congress Election Report Release 2021

காங்கிரஸ் தேர்தல்
அறிக்கை வெளியீடு 2021

2021-ஆம்
ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல்
ஏப்ரல் மாதம் 6-ஆம்
தேதியும், 
வாக்கு எண்ணிக்கை மே
மாதம் 2-ஆம் தேதியும்
நடைபெற உள்ளதாக தலைமை
தேர்தல் அதிகாரி அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தேர்தல்
வாக்காளர் பட்டியல், தேர்தல்
பிரச்சாரம், தேர்தல் அறிக்கை
என அரசியல் களம்
சூடுபிடித்துள்ளது. தேர்தல்
ஆணையமும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி, வாக்காளர் பட்டியல்,
வாக்குச்சாவடிகள் அமைத்தல்
போன்ற பணிகளில் ஈடுபட்டு
வருகிறது.

வாக்காளர் பட்டியலில் உங்களது விபரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்:
Click Here

தற்போது
காங்கிரஸ் கட்சியின் தேர்தல்
மக்கள் நலனுக்காக பல்வேறு
நல திட்டங்கள் அறிக்கையை
வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை:

  • தமிழகத்தில் முற்றிலுமாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
  • பெண்களுக்கு கல்வி
    மற்றும் வேலைவாய்ப்புகளில் சமஉரிமை
    வழங்கப்படும்.
  • வேலைவாய்ப்பு இல்லாத
    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் பல
    சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • தமிழக மீனவர்கள்
    பழங்குடியினர் பிரிவில்
    சேர்க்கப்படுவார்கள்.
  • மத்திய அரசின்
    விவசாய சட்டங்களுக்கு பதிலாக
    புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்.
  • மாநில தகவல்
    ஆணையத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு
    வர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழகத்தில் நீட்
    தேர்வு ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • ஒழுங்காற்று குழு
    தன்னாட்சி அமைப்பாக காவிரி
    நீர் மேலாண்மை வாரியம்
    செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கிராமப்புறங்களில் சிறு
    தொழில்களை ஊக்குவிக்க 25 சதவிகித
    மானியத்துடன் கூடிய
    கடன் வசதி செய்து
    தரப்படும்.
  • குடும்பத்தின் குடும்பத்தலைவர் வயதில் மூத்தவராக இருந்தால்
    வீடு தேடி ரேஷன்
    பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.
  • அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராக பணியாற்றலாம்.
  • தபால் மூலமாக
    முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்தி
    வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் ஆவண
    படுகொலைகளை தடுக்க நடவடிக்கை
    எடுக்கப்படும்.
  • கூடுதல் நெல்
    கொள்முதல் நிலையங்களை டெல்டா
    மாவட்ட விவசாயிகளுக்கு திறக்க
    நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வறுமைக்கோட்டிற்கு கீழ்
    உள்ள பெண் குழந்தைகளுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்.
  • மக்களுக்கு மின்
    தேவைகளுக்கு ஏற்றார் போல
    மின் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • மாதம் ஒரு
    முறை மின் கணக்கீடு
    செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
  • பணியில் இருக்கும்
    பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம்
    வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • உள்ளாட்சிகளுக்கு மீண்டும்
    அதிகாரம் வழங்க நடவடிக்கை
    எடுக்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் உங்களது விபரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்:
Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓