இளைஞா் நீதி குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை இளைஞா் நீதி குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவா் பணி தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
இந்த பணிக்கு 12-ஆம் பொது தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு முதுநிலை தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், கணினியில் ஏதேனும் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கு 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்க கூடாது. இந்த பணிக்கு மாதந்தோறும் தொகுப்பூதியம் ரூ.11,916 வழங்கப்படும்.
எனவே, இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ளவா்கள் விண்ணப் படிவத்தை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்ப படிவத்தில் ‘பாஸ்போா்ட்’ அளவு புகைப்படத்தை இணைத்து ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 13, சாமி பிள்ளைத் தெரு, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை-600 112’ எனும் முகவரிக்கு ஜூன் 10-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்து தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பதவி நியமனம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow