கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும்.
கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

