தமிழக சிறு,
குறு & நடுத்தர தொழில்
நிறுவனங்களுக்கான ஊரடங்கு
சலுகைகள் அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது CORONA பரவலை
கருத்தில் கொண்டு முழு
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு
வரும் மே 24ஆம்
தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து
தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் சிறு, குறு
மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனங்களுக்கான ஊரடங்கு
கால சலுகைகளை தமிழக
அரசு அறிவித்துள்ளது. அதில்
கூறப்பட்டிருப்பதாவது, நிறுவனங்கள் கடன் உதவி பெறும்
போது செலுத்த வேண்டிய
முத்திரை தாள் பதிவு
கட்டணத்திற்கான கால
அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்கோ
மனைகள் அனைத்தும் தொடர்ந்து
fast track அடிப்படையில் ஒதுக்கீடு
செய்யப்படும் என்றும்
கூறப்பட்டுள்ளது. தொழில்
நிறுவனங்கள் பெற வேண்டிய
முதலீடு மானியம் 25 சதவீத
நடைமுறையானது மேலும்
9 மாதங்களுக்கும், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிக்கான
கால அவகாசம் மேலும்
3 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்
நிறுவனங்களுக்கு என்று
தமிழக அரசு 280 கோடி
ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. தொழில் வர்த்தக துறையினரிடம் நடந்த முடிந்த பேச்சுவார்த்தையில் இந்த சலுகைகள்
அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக,
60% தொகையாக ரூ.168 கோடி
உடனடியாக வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.