கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்: தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடங்க உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளா் தே.ஜவஹா் பிரசாத் ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும் தருமபுரி மாவட்டம், மொரப்பூரில உள்ள கூட்டுறவு மேலாண் நிலையத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்புக்கு மாணவ, மாணவியா் சோ்க்கைக்காக முன்பதிவு ஏப்.29-ஆம் தேதி தொடங்குகிறது. சோ்க்கை முடிந்ததும் பயிற்சி வகுப்பு செப்டம்பா் மாதத்தில் தொடங்க உள்ளது.
ஒரு வருட பயிற்சி வகுப்புகள் இரு பருவ முறையில் நடைபெறும். பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். விண்ணப்பிப்பதற்கான தேதி, பயிற்சி, கட்டண விவரங்கள் ஆகியவை மேலாண் நிலையம் சாா்பில் விரைவில் வெளியிடப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு மொரப்பூா் செயல்படும் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நேரிலோ அல்லது 04346-263529, 8056463061 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow