HomeBlog2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் & அச்சிடுதல் – மத்திய அரசு புதிய தகவல்

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் & அச்சிடுதல் – மத்திய அரசு புதிய தகவல்

 

Circulation & Printing of 2000 Rupee Notes - Central Government New Information

2000 ரூபாய் நோட்டுகள்
புழக்கம் & அச்சிடுதல்மத்திய
அரசு புதிய தகவல்

இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு
மத்திய அரசு சார்பில்
500/-
மற்றும் ரூ1000/- ரூபாய்
நோட்டுகள் செல்லாது என
அறிவிக்கப்பட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த
பணமதிப்பிழப்பு கொள்கையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் பின்னர்
புது ரூ.2000, ரூ.500,
ரூ.200 நோட்டுகள் படிப்படியாக வெளியிடப்பட்டன.

2000 ரூபாய்
நோட்டுகள் கருப்புப்பண பதுக்கலுக்கு அதிகளவில் வழிவகுப்பதாகவும், இதனால்
இது விரைவில் தடை
செய்யப்பட உள்ளதாகவும் சமூக
வலைதளங்களில் கடந்த
சில மாதங்களுக்கு முன்னர்
வதந்திகள் வேகமாக பரவின.

ஆனால்
இதற்கு மத்திய அரசு
மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய
நிதித்துறை இணை அமைச்சர்
அனுராக் தாக்கூர் அவர்களிடம் இது தொடர்பாக கேள்வி
எழுப்பப்பட்டது. இதற்கு
அவர் எழுத்துப் பூர்வமாக
பதில் அளித்துள்ளார். அவர்
கூறுகையில், ரூ.2000 மதிப்புள்ள 3,362 லட்சம் தாள்கள்
2018
மார்ச் 30 அன்று புழக்கத்தில் இருந்தன.

பிப்ரவரி
26, 2021
நிலவரப்படி, ரூ.2,000 நோட்டுகளின் 2,499 லட்சம் தாள்கள்
புழக்கத்தில் இருந்தன.
2016-2017
நிதியாண்டில் (ஏப்ரல்
2016
முதல் மார்ச் 2017 வரை)
ரூ.2,000 3,542.991 லட்சம்
நோட்டுகள் அச்சிடப்பட்டதாக ரிசர்வ்
வங்கி 2019.ல் கூறியிருந்தது.

இருப்பினும், 2017-2018-ஆம் ஆண்டில்,
111.507
லட்சம் நோட்டுகள் மட்டுமே
அச்சிடப்பட்டன. இது
2018-2019
ஆம் ஆண்டில் மேலும்
46.690
லட்சம் நோட்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஏப்ரல் 2019 முதல் புதிய
ரூ.2,000 தாள்கள் அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்
மூலம் நாட்டில் 2,000 ரூபாய்
நோட்டுக்களின் பயன்பாடு
படிப்படியாக குறைந்து வருவதாக
விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!