Home Blog ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரியில் எய்ம்ஸ் வகுப்பு துவக்கம்

ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரியில் எய்ம்ஸ் வகுப்பு துவக்கம்

0

Launch of AIIMS class at Ramanathapuram Medical College

ராமநாதபுரம் மருத்துவ
கல்லுாரியில் எய்ம்ஸ்
வகுப்பு துவக்கம்

மதுரை
எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு,
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் ஏப்.,
4
முதல் துவங்க உள்ளது
என மதுரை எய்ம்ஸ்
இயக்குனர் ஹனுமந்தராவ் கூறினார்.

மதுரையில்
எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி
மருத்துவமனை அமைக்க, பிரதமர்
மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணி தற்போது
துவங்கியுள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்.,
மாணவர் சேர்க்கை 2022 – 2023க்கு
அறிவிக்கப்பட்டது.

மதுரை
எய்ம்ஸ் மாணவர்கள் 50 பேருக்கான
முதலாம் ஆண்டு வகுப்பு,
புதிதாக கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு முதலாம்
ஆண்டு வகுப்பு ஏப்.,
4
ல் துவங்குகிறது.

மதுரை எய்ம்ஸ் இயக்குனர் ஹனுமந்தராவ் கூறியதாவது:

இதுவரை
24
மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிறைவடைந்துள்ளது.

ஏப்.,
4
ல் வகுப்புகள் துவங்கும்.
அடுத்த கவுன்சிலிங் மார்ச்
28
முதல் நடக்கிறது.அனாடமி,
பயோ கெமிஸ்ட்ரி, கம்யூனிட்டி மெடிசன் உள்ளிட்ட பிரிவுகளில் 8 பேராசிரியர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். மேலும்,
மங்களகிரி எய்ம்ஸ் பேராசிரியர்கள் ஓரிரு வாரங்களில் வர
உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரிக்கு மொத்தம் 183 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு அறிவிப்பு சில
தினங்களில் வெளியிடப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version