Home Blog முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தால் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தால் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

0

Chief Minister Stalin's visit to Dubai has resulted in the employment of 9,700 people

முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தால்
9,700
பேருக்கு வேலைவாய்ப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தமிழ்நாட்டிற்கு 2,600 கோடி ரூபாய்
முதலீடு மற்றும் 9,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு
அமீரகத்தின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது .

முதலமைச்சர் மு..ஸ்டாலின்,
தமிழ்நாடு மற்றும் ஐக்கிய
அரபு நாடுகளிடையே பொருளாதார
மற்றும் வர்த்தக உறவுகளை
மேம்படுத்தும் வகையிலும்
,
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் , துபாய்
மற்றும் அபுதாபிக்கு அரசு
முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலமைச்சர், ஐக்கிய அரபு நாடுகளின்
முதலீட்டாளர் அமைப்பின்
உறுப்பினர்களை சந்தித்தார். இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் சிறப்புகளையும், தமிழகத்தில் சிறந்த தொழில் சூழல்
நிலவுவதையும் சுட்டிக்காட்டி, முதலீடுகள் மேற்கொள்ளுமாறு , கோரிக்கை
விடுத்தார்.

இதனையடுத்து முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன்படி,
துபாயைச் சேர்ந்த நோபுள்
ஸ்டீல்ஸ் நிறுவனம் (Noble Steel
Company), 1,000
கோடி ரூபாய் முதலீடு
மற்றும் 1,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில்,
உற்பத்தித் திட்டத்தினை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஒயிட்
ஹவுஸ் நிறுவனம் (White House), 500
கோடி ரூபாய் முதலீடு
மற்றும் 3,000 நபர்களுக்கு வேலை
வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில்,
3
வருடத்தில் 150 கோடி ரூபாய்
முதலீட்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்திலும், 5 வருடத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள
வாலாஜாபாத்திலும் , என
இரு ஒருங்கிணைந்த தையல்
ஆலைகள் (Integrated Sewing Plants) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது.

துபாயைச்
சேர்ந்த டிரான்ஸ்வேல்டு குழுமம்
(M/s. Transworld Group) 100
கோடி ரூபாய்
முதலீடு மற்றும் 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் உணவுப்
பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

.ஆஸ்டர்
DM
ஹெல்த்கேர் அமைப்பு (Aster DM
Healthcare), 500
கோடி ரூபாய் முதலீடு
மற்றும் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு (3000 நபர்களுக்கு நேரடி
வேலைவாய்ப்பு மற்றும்
500
நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு) என்ற வகையில், 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஷெராப்
குழும நிறுவனம் (Sharaf Group), தமிழ்நாட்டில், 500 கோடி ரூபாய்
முதலீடு மற்றும் 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற
வகையில், இருப்புப்பாதை இணைப்பு
வசதியுடன், ஒரு சரக்குப்
போக்குவரத்துப் பூங்கா
அமைத்திடுவதற்காக, தமிழ்நாடு
அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version