HomeBlogசென்னை ஐஐடி பிஎஸ்சி புரோகிராமிங், டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கு உதவித்தொகை அறிவிப்பு

சென்னை ஐஐடி பிஎஸ்சி புரோகிராமிங், டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கு உதவித்தொகை அறிவிப்பு

 

சென்னை ஐஐடி
பிஎஸ்சி புரோகிராமிங், டேட்டா
சயின்ஸ் படிப்புகளுக்கு  உதவித்தொகை அறிவிப்பு

சென்னை
ஐஐடியில் பிஎஸ்சி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ்
படிப்புகளுக்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளது. கடந்த ஆண்டு
இந்த 4 ஆண்டுகள் படிப்பை
ஆன்லைன் மூலமாக படிக்கும்
வாய்ப்பை சென்னை ஐஐடி
அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த
படிப்புகளில் சேர
வயது வரம்பு இல்லை.
ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள்
மட்டும் இல்லாமல் ஏற்கனவே
பணி செய்பவர்கள், கணினி
ஆர்வலர்கள் என பலர்
இந்த படிப்புகளில் சேர்ந்து
படித்து வருகின்றனர். இந்த
படிப்புகள் மூலமாக பல்வேறு
துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளதால்
மாணவர்கள் அதிகம் இந்த
படிப்புகளில் சேர
வேண்டும் என்பதற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த
உதவித்தொகை வழங்கVerizon Indiaஎன்ற தகவல்
தொழில்நுட்ப நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மாணவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1
லட்சமாக இருக்க வேண்டும்.
4
ஆண்டுகள் படிப்பு காலத்தில்
4
ஆண்டுகளும் உதவித்தொகை வழங்கப்படும். இதில் பெண்கள் மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

வெரிசான்
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயராமன் சுப்பிரமணியன் கூறுகையில்:

4 ஆண்டு
படிப்புகளில் சேர்ந்து
படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் ஏராளாமான வேலைவாய்ப்புகள் உள்ளது.
டேட்டா சயின்ஸ்டிஸ்ட், டேட்டா
இன்ஜினீயர் கூட ஆகலாம்.
இந்த படிப்புகளில் பயிலும்
மாணவர்களுக்கு சென்னை
ஐஐடி உடன் இணைந்து
வி புரோபெல்என்ற
உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும்
இது தொடர்பாக சென்னை ஐஐடி டீன் மகேஷ் பஞ்சநுல்லா கூறுகையில்:

அமெரிக்க
தொழிலாளர் அமைப்பின் புள்ளி
விவரப்படி, மிகவேகமாக வளர்ந்து
வரும் துறைகளில் டேட்டா
சயின்ஸ் துறையும் ஒன்று.
2026
ஆம் ஆண்டு புதிதாக
ஒரு கோடியே 15 லட்சம்
வேலைவாய்ப்புகள் உருவாக
வாய்ப்புகள் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular