Home Blog மத்திய அரசின் NISHTHA திட்டம்–56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி

மத்திய அரசின் NISHTHA திட்டம்–56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி

0

 

Central Government's NISHTHA Program - Skill Training for 56 Lakh Teachers

மத்திய அரசின்
NISHTHA திட்டம்–56 லட்சம்
ஆசிரியர்களுக்கு திறன்
பயிற்சி

2020-2021 கல்வியாண்டில் தேசிய முயற்சி (NISHTHA) திட்டத்தின் மூலம் 56 லட்சம்
ஆசிரியர்களுக்கு திறன்
வளர்ப்பு பயிற்சி அளிக்க
வேண்டும் என்ற இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய
கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு
கல்வியாண்டில் அரசு
பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மேம்படுத்தும் வகையில்,
அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட
அனைத்து துறைகளிலும் தற்போதுள்ள வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஆசிரியர்கள் கற்பிக்கும் திறனை
வளர்த்து கொள்ளவும், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆசிரியர்கள் எளிதில் பயன்படுத்தவும் பள்ளி
முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் திறன் வளர்க்க தேசிய
முயற்சி NISHTHA திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த
திட்டம் மத்திய அரசு
மூலமாக 2019 ஆம் ஆண்டு
கொண்டுவரப்பட்டது. இந்த
திட்டத்தின் மூலம் நாடு
முழுவதும் உள்ள மத்திய
மற்றும் மாநில அரசு
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட
10
மொழிகளில் பணியிடைப் பயிற்சி
வழங்கப்படுகிறது. இந்த
நிஸ்தா பயிற்சி நாடு
முழுவதும் உள்ள 56 லட்சம்
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட
உள்ளதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம்
இணையதளத்தில் வெளியிட்ட
அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவை, கொரோனா
காலத்தில் 30 லட்சத்து அதிகமான
ஆசிரியர்களுக்கு ஆன்லைன்
மூலமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு
கல்வி ஆண்டில் 56 லட்சம்
ஆசிரியர்களுக்கு பயிற்சி
வழங்கப்பட திட்டம் உள்ளது.
அவர்களுக்கான பயிற்சி
ஜூலை மாதம் முதல்
தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய
https://itpd.ncert.gov.in/  
என்ற இணையதளத்தை காணலாம். நிஸ்தா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சியை
அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டாயம் பெற
வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version