CBSE 10, 12ம்
வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
ஜூலையில் வெளியீடு
10, 12ம்
வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை
ஜூலை மாதம் வெளியிட
CBSE முடிவு செய்துள்ளது. இரண்டு கட்ட தேர்வு
முடிவுகளையும் ஒருங்கிணைத்து இறுதி மதிப்பெண் வெளியிடப்படுகிறது.
நடப்பு
ஆண்டுக்கான 10, 12ம் வகுப்பு
பொதுத்தேர்வை கரோனா
பரவலால் 2 கட்டங்களாக நடத்துவதற்கு CBSE முடிவு செய்தது.
அதன்படி, முதல்கட்ட தேர்வு
கடந்த நவம்பர், டிசம்பர்
மாதங்களில் நடத்தப்பட்டது. அதைத்
தொடர்ந்து 2ம் கட்டத்
தேர்வு ஏப்ரல் 26ம்
தேதி முதல் தொடங்கி
நடந்து வருகின்றன.
இந்தத்
தேர்வுகள் 10ம் வகுப்புக்கு மே 24ம் தேதியும்,
12ம் வகுப்புக்கு ஜூன்
15ம் தேதியும் முடியவடைய
உள்ளன. இந்நிலையில், தேர்வு
முடிவுகளை ஜூலையில் வெளியிடுவதற்கு சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து CBSE மண்டல அதிகாரிகள் சிலர் கூறுகையில்:
10, 12ம்
வகுப்பு 2ம் கட்டத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு
திருத்துதல் பணிகளை துரிதமாக
முடித்து தேர்வு முடிவை
ஜூலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக
ஒவ்வொரு ஆசிரியர்களும் முன்பைவிட
கூடுதலாக தினமும் 35 விடைத்தாள்களை திருத்தி வருகின்றனர். அதேநேரம்
கூடுமானவரை விடைத்தாள்களை 2 முறை
மதிப்பீடு செய்யவும்ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விரு
கட்ட தேர்வுமுடிவுகளையும் ஒருங்கிணைத்து இறுதி மதிப்பெண் வெளியிடப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


