TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
மானியத்தில் மதிப்புக் கூட்டு இயந்திரங்கள்
அழைப்பு – பெரம்பலூா்
அறுவடைக்குப்
பின்சார்
தொழில்நுட்ப
மதிப்புக்
கூட்டு
இயந்திரங்கள்
மானியத்தில்
பெற
பெரம்பலூா்
மாவட்டத்தைச்
சோ்ந்த
விவசாயிகளுக்கு
பெரம்பலூா் ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அறுவடைக்குப்
பின்சார்
தொழில்நுட்ப
மதிப்புக்
கூட்டு
இயந்திரங்கள்
மானியத்தில்
வழங்கும்
திட்டம்
2020-21 ஆம்
ஆண்டு
முதல்
செயல்படுத்தப்படுகிறது.
நிகழாண்டில், பெரம்பலூா் மாவட்டத்துக்கு
மதிப்புக்
கூட்டும்
இயந்திரங்கள்
மானியத்தில்
வழங்க
ரூ.
9.41 லட்சம்
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் அறுவடை செய்யும் விளைபொருள்களை,
தங்களது
பகுதிகளிலேயே
மதிப்புக்
கூட்டி,
அதிக
விலைக்கு
விற்று
லாபம்
பெற
மதிப்புக்
கூட்டும்
இயந்திரங்கள்
பெரிதும்
உறுதுணையாக
உள்ளன.
வேளாண் விளைபொருள்ளை
மதிப்புக்
கூட்டும்
இயந்திரங்களான
சிறு
பருப்பு
உடைக்கும்
இயந்திரம்,
மாவு
அரைக்கும்
இயந்திரம்,
கால்நடை
தீவனம்
அரைக்கும்
இயந்திரம்,
தேங்காய்
மட்டை
உரித்தெடுக்கும்
இயந்திரம்,
நிலக்கடலை
தோலுரித்து
தரம்
பிரிக்கும்
இயந்திரம்,
எண்ணெய்
பிழிந்தெடுக்கும்
செக்கு
இயந்திரம்,
வாழைநார்
பிரித்தெடுக்கும்
கருவி
ஆகியவை
40% பின்னேற்பு
மானியமாக
வழங்கப்படுகிறது.
மானிய விலையில் இயந்திரங்கள்
பெற்று
பயனடைய
விரும்பும்
விவசாயிகள்
எளம்பலூா்,
தண்ணீா்பந்தலில்
உள்ள
உதவி
செயற்பொறியாளா்,
வேளாண்மைப்
பொறியியல்
துறை
அல்லது
ஆட்சியரக
வளாகத்திலுள்ள
செயற்பொறியாளா்,
வேளாண்மைப்
பொறியியல்
துறை
அலுவலகத்தை
அணுகி
பயன்பெறலாம்.