Join Whatsapp Group

Join Telegram Group

இலக்கியத் திறனறித் தேர்வுக்கு பயிற்சி – பிளஸ் 1 மாணவா்களுக்கு அழைப்பு

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்

இலக்கியத் திறனறித்
தேர்வுக்கு
பயிற்சி
பிளஸ் 1 மாணவா்களுக்கு அழைப்பு

கல்வி
உதவித் தொகை பெற
11
ம் வகுப்பு மாணவா்களுக்கான தமிழ் மொழி இலக்கியத்
திறனறித் தேர்வுக்கான பயிற்சி
வகுப்பு திருச்சி மாவட்ட
மைய நூலகத்தில் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மைய நூலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி
மாவட்ட மைய நூலகம்,
திருச்சி வாசகா் வட்டம்
இணைந்து நடத்தும் பயிற்சி
வகுப்பில் அரசு, அரசு
உதவி பெறும், தனியார்
பள்ளிகளைச் சோந்த 11ஆம்
வகுப்பு மாணவா்கள் பங்கேற்கலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெறும்
மாணவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம்
அரசு உதவித் தொகை
வழங்கப்படும்.

பயிற்சி
வகுப்பு மாணவிகளுக்கு தினமும்
காலை 10 மணி முதல்
பிற்பகல் 1 மணி வரையும்,
மாணவா்களுக்கு பிற்பகல்
2
மணி முதல் 5 மணி
வரையும் நடைபெறும். மேலும்,
வாரந்தேர்ரும் சனிக்கிழமைகளிலும் நடைபெறும்.

இதில்
பங்கேற்க விரும்பும் மாணவா்கள்
தங்களது பள்ளி அடையாள
அட்டை, ஆதார் அட்டை
மற்றும் பத்தாம் வகுப்பு
தமிழ் பாடநூல், நோட்டு
புத்தகங்களை கொண்டுவர வேண்டும்.
பெற்றோருடன் வர வேண்டும்.

பயிற்சி
வகுப்புகளை மாவட்ட ஆசிரியா்
பயிற்சி நிறுவனத்தின் ஓய்வு
பெற்ற முதல்வா் எஸ்.
சிவகுமார் ஒருங்கிணைத்து நடத்தவுள்ளார்.

கூடுதல்
விவரங்களுக்கு, 63836 90730
என்ற எண்ணில் தொடா்பு
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Related Post

Leave a Comment

× Xerox [1 page - 50p Only]