விவசாய மின்
இணைப்பு பெறலாம் விவசாயிகளுக்கு அழைப்பு
விவசாய
மின் இணைப்பு வேண்டி
பதிவு செய்தவர்கள், உதவி
பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்
என, மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவை
தெற்கு மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட, சோமனுார், குனியமுத்துார், நெகமம் கோட்டங்களில், விவசாய
மின் இணைப்பு வழங்கப்படுகிறது.பதிவு செய்து, நிலுவையில் உள்ள விவசாயிகள், 2013 ஏப்.,
1முதல், 2013 மார்ச் 31 வரையில்,
பதிவு செய்தவர்கள், சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.தேவையான ஆவணங்களை
சமர்ப்பித்து, தயார்நிலை
பதிவு செய்து, சாதாரண
வரியில் மின் இணைப்பு
பெற்றுக்கொள்ளலாம்.
மேலும்,
2013 ஏப்., 1 முதல், 2014 மார்ச்
31 வரையில், சாதாரண வரிசையில்
பதிவு செய்தவர்கள், 10 ஆயிரம்
ரூபாய் சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு பெற,
500 ரூபாய் முன் மதிப்பீட்டு தொகையை செலுத்தி விருப்பத்தை தெரிவிக்கலாம்.மேலும்,
2013 ஏப்., 1 முதல், 2018 மார்ச்
31 வரையில், சுய நிதி
திட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய்
மற்றும் 50 ஆயிரம் ரூபாய்
திட்டங்களில், 500 ரூபாய்
முன் மதிப்பீட்டு தொகை
செலுத்தியவர்கள், பிரிவு
அலுவலக உதவி பொறியாளரை
உரிய ஆவணங்களுடன் அணுகலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள,
சோமனுார் கோட்டத்துக்கு உட்பட்ட
விவசாயிகள், இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.