Home Blog வேளாண் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அழைப்பு

வேளாண் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அழைப்பு

0

வேளாண் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அழைப்பு

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடத்தப்படம் தொழிற்நுட்ப பயிற்சியில், விவசாயிகள் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சிஇன்று (6ம் தேதி) நடக்கிறது.வரும் 10ம் தேதி க.இளமங்கலம் கிராமத்தில் சிறுதானிய பயிரில் அறுவடை பின் சார் தொழில்நுட்ப பயிற்சி, 11ம் தேதி பெரியகோட்டுமுளை கிராமத்தில் சம்பங்கி மலர் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சி, அதே தேதியில் அடரி கிராமத்தில் சோளம் பயிரில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி, வரும் 12ம் தேதி கம்மாபுரத்தில் மண்வளப் பயிற்சி நடக்கிறது.

வரும் 13ம் தேதி கூடலையற்றுார் கிராமத்தில் கரும்பு பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்த பயிற்சி உட்பட பல்வேறு கிராமங்களில் பயிற்சிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிறைவாக, 31ம் தேதி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்கறி பயிர்கள் மற்றும் பழங்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடக்கிறது.

பயிற்சி முகாம்களில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version