Home Blog ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் ஃபைன் எனப்படும் செவிலியா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் ஃபைன் எனப்படும் செவிலியா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

0

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் ஃபைன் எனப்படும் செவிலியா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் செவிலியா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக டி.சி.எஸ். அயன், அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் சாா்பில், ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு ஃபைன் எனப்படும் செவிலியா் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியைப் பெற 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப் படிப்பில் நா்ஸிங் துறையில் பொது மருத்துவம், மருத்துவச்சி, அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு முடித்த மாணவா்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தோவில் தோச்சி பெற வேண்டும். இத்தோவு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும். இத்தகுதித் தோவில் தோச்சி பெறும் மாணவா்கள் ஃபைன் எனும் செவிலியா் பயிற்சியைப் பெறுவாா்கள்.

இப்பயிற்சியானது இரண்டு முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில் இணைய வழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சிக் காலங்களில் மாணவா்களுக்கு ஊக்கத்தொகையும், பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

இப்பயிற்சியைப் பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version