Home Blog பிரதீபா பாட்டீலுக்கு மெக்ஸிகோவின் உயரிய விருது

பிரதீபா பாட்டீலுக்கு மெக்ஸிகோவின் உயரிய விருது

0

பிரதீபா பாட்டீலுக்கு மெக்ஸிகோவின் உயரிய விருது

முன்னாள் குடியரசுத்
தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு மெக்ஸிகோ நாடால் வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் மிக
உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

புணேயில் சனிக்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீலிடம் இந்தியாவுக்கான மெக்ஸிகோ தூதர் மெல்பா
ரியா, அந்த விருதை அளித்தார். அந்த விருதின் பெயர், “ஆர்டன் மெக்ஸிகனா டெல் அகுலா
அஸ்டெகா’ ஆகும்.

நிகழ்ச்சியில்
பிரதீபா பாட்டீல் பேசுகையில், “நாட்டின் சார்பாகவே எனது பணிகளை செய்தேன். ஆதலால்
இந்த விருதை, இந்தியாவுக்கான கௌரவமாக கருதுகிறேன். கடந்த 2007ஆம் ஆண்டில் அப்போதைய
மெக்ஸிகோ அதிபர் இந்தியா வந்தார். இதைத் தொடர்ந்து, மெக்ஸிகோவுக்கு 2008ஆம் ஆண்டில்
நான் சென்றேன். இக்காலக்கட்டத்தில் இந்தியா-மெக்ஸிகோ இடையே நட்புறவு வலுவடைந்தது’ என்றார்.

இந்தியாவுக்கான
மெக்ஸிகோ தூதர் ரியா பேசுகையில், “இந்த விருதை பெறும் முதல் இந்திய பெண், பிரதீபா
பாட்டீல் ஆவார். இதற்கு முன்பு இந்த விருதை நெல்சன் மண்டேலா, 2ஆவது எலிசபெத், சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன், பில் கேட்ஸ் ஆகியோர் பெற்றுள்ளனர்’ என்றார்.

நாட்டின் குடியரசுத்
தலைவராக பிரதீபா பாட்டீல் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.
அவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்த காலத்தில்தான், இந்தியா-மெக்ஸிகோ இடையே புரிந்துணர்வு
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரு நாடுகளிடையேயான நட்புறவு மேலும் வலுவடைந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version