Home Blog தோட்டக்கலை சாகுபடியில் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தோட்டக்கலை சாகுபடியில் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

0
Apply for the award in Horticultural Cultivation

தோட்டக்கலை சாகுபடியில் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தோட்டக்கலை சாகுபடியில் விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தோட்டக்கலை பயிர்களை சிறந்த முறையில், தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு, சாகுபடி செய்துவரும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழக அரசு வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தலா, 10 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளது.


மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள்  

அதன்படி, காய்கறி பயிர்கள் சாகுபடியில் சாதனையாளர் விருது, பழப்பயிர்கள் சாதனையாளர் விருது, சுவை தாளித பயிர்கள் விருது, மூலிகை வாசனை திரவிய பயிர்கள் விருது, மலை பயிர்கள் விருது, மலர்கள் விருது, நுண்ணீர்ப்பாசன தொழில்நுட்பத்திற்கான விருது, உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு விருது, அங்கக இயற்கை விவசாயத்துக்கான விருது, புதிய, தனித்துவம் மிக்க மாவட்டத்திற்கே சிறப்பிற்குரிய தோட்டக்கலை பயிர் சாகுபடி சாதனையாளர் விருது என, 10 விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும், இதில் போட்டியிடலாம். ஒரு விவசாயி, வட்டார அளவில் ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக, 100 ரூபாய் செலுத்தி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

      NO COMMENTS

      LEAVE A REPLY

      Please enter your comment!
      Please enter your name here

      100
      Xerox (1 page - 50p Only)
      WhatsApp Group
      Exit mobile version