தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் தட்டச்சுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இந்த முறை தட்டச்சு தேர்வு கடந்த 75 ஆண்டுகளாக நடைபெறும் முறையில் இல்லாமல் புதிய நடைமுறையில் நடைபெற உள்ளது. புதிய நடைமுறையின் படி, இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள்-1 ஸ்டேட்மென்ட், லெட்டர் தேர்வாகவும், தாள்- 2 ஸ்பீடு தேர்வாக நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுகள் 2022 ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. எனவே தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களும் இன்று முதல் TNDTE டைப்ரைட்டிங் ஹால் டிக்கெட் 2022 ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பிற்கு சென்று, தங்களின் தொலைபேசி எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீட்டு தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Click Here to Download TNDTE Typewriting Exam Hall Ticket