தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச பஞ்சு பொம்மை தயாரித்தல் பயிற்சி ஆகஸ்ட் 2ல் துவங்குகிறது.
கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய வேலை இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி 13 நாட்கள் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.
பயிற்சியில் மதிய உணவு இலவசம். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க கடன் ஆலோசனை வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் புகைப்படம், ஆதார் நகல், ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பயிற்சி மையத்தில் நேரில் முன்பதிவு செய்யலாம்.மேலும் விவரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Entha place
Read post for more details