Home Blog போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்று சரிபார்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்று சரிபார்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

0




போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்று சரிபார்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 

போட்டி
தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு குறித்து
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் மதிப்பெண்கள் மற்றும்
சான்று சரிபார்ப்பு, நேர்காணல்
தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு
செய்யப்பட்டவர்கள் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணைய
இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சான்று
சரிபார்ப்பு தேதி மற்றும்
அது தொடர்பான விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி,
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு
திட்டத்தின் துணைப் பணிகளுக்கான வரைவாளர் கிரேடு 3, பணியிடங்கள் 53.க்கு கடந்த பிப்ரவரி
3.
ம் தேதி போட்டித்
தேர்வு நடந்தது.

அதில்
2411
பேர் எழுதினர். அவர்களில்
110
பேர் சான்று சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 16, 17ம்
தேதிகளில் இவர்களுக்கு வாய்மொழித் தேர்வு நடக்கிறது.

தமிழ்நாடு
இந்து அறநிலையத் துறை
துணைநிலைப் பணிகளில் நிர்வாக
அலுவலர் கிரேடு 3க்கான
105
பணியிடங்களுக்கு டந்த
பிப்ரவரி 16ம் தேதி
போட்டித் தேர்வு நடந்தது.
அதில் 46 ஆயிரத்து 316 பேர்
தேர்வு எழுதினர். அவர்களில்
213
பேர் சான்று சரிபார்ப்பு மற்றும் வாய்மொழித் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 18, 19, மற்றும்
20
ம் தேதிகளில் வாய்மொழித் தேர்வு நடக்கிறது. சமூகபாதுகாப்பு துறை பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட உதவி கண்காணிப்பாளர் பணியிடங்கள் 4க்கு கடந்த மே
5
ம் தேதி போட்டித்
தேர்வு நடந்தது. மொத்தம்
106
பேர் தேர்வு எழுதினர்.
அவர்கள் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ள 12ம்
தேதி ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 95 பேர்
சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு மீன்வளத்துறையில் சோதனைக்கூட உதவியாளர்
பணி 1க்கு கடந்த
ஜூன் மாதம் 22ம்
தேதி போட்டித் தேர்வு
நடந்தது. அதில் 369 பேர்
எழுதினர். அவர்கள் சான்று
சரிபார்ப்பில் கலந்து
கொள்ள 12ம் தேதி
முதல் 19ம் தேதி
வரை சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 பேர்
சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version