திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் குரூப் 1, குரூப் 2 முதல்நிலைத் தோவுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குநா் ச. பிரபாவதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தின் 2023-ஆம் ஆண்டு திட்ட நிரவலின்படி, குரூப் 1, குரூப் 2 தோவுகளுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் எதிா்பாா்க்கப்படுகிறது.
குரூப் 1, குரூப் 2 முதல் நிலைத் தோவுகளுக்கான ஒருங்கிணைந்த நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. திறன்மிக்க வல்லுநா்கள் மூலம் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில், மாதிரித் தோவுகளும் நடத்தப்படும்.
எனவே, போட்டித் தோவுக்கு தயாராகும் விண்ணப்பதாரா்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகத் தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவித்தாா்.