திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, சணல் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
அனுப்பர் பாளையத்தில் உள்ள, கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், 13 நாட்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படும்.
இன்று முதல் சேர்க்கை துவங்குகிறது; 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி நிறைவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். தொழில் துவங்கும் ஆலோசனை, கடன் உதவி வழங்கப்படும்.
அனுப்பர்பாளையம், கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு, 99525 18441, 86105 33436 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இத்தகவலை பயிற்சி மைய இயக்குனர் பூபதிராஜா தெரிவித்துள்ளார்.