Thursday, August 14, 2025
HomeBlogதமிழக தேர்தல் பணிகளில் முன்னாள் காவலர்கள், ராணுவத்தினருக்கு அழைப்பு

தமிழக தேர்தல் பணிகளில் முன்னாள் காவலர்கள், ராணுவத்தினருக்கு அழைப்பு

 

தமிழக தேர்தல்
பணிகளில் முன்னாள் காவலர்கள்,
ராணுவத்தினருக்கு அழைப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6-ஆம்
தேதி நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில
வாரங்கள் மட்டுமே உள்ளதால்
தேர்தல் பணிகளில் தேர்தல்
ஆணையமும், அரசியல் கட்சியினரும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து அரசு
அலுவலங்களும் தேர்தல்
ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்
வந்துள்ளது.

தேர்தல்
பணிகளில் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் இந்த
தேர்தல் பாதுகாப்பு பணிகளில்
முன்னாள் காவல்துறைகளில் பணியாற்றி
ஓய்வு பெற்ற காவல்
உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்,
முன்னாள் இராணுவத்தினர், முன்னாள்
தீயணைப்பு வீரர்கள், துணை
ராணுவத்தினர், சிறைத்துறை காவலர்கள் ஈடுபடலாம்.

இந்நிலையில் டிஜிபி அலுவலகம் வெளியிட்ட
அறிவிப்பின் படி, “தமிழக
சட்டமன்ற தேர்தல் பணிகளில்
ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் அவர்கள்
பகுதிகளில் உள்ள காவல்
நிலையங்களில் உரிய
ஆவணங்களை சமர்ப்பித்து பணியாற்றலாம் அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் தங்களது
விருப்பத்தினை தெரிவிக்கலாம். மேலும் ஏப்ரல் 4 ஆம்
தேதி முதல் 7-ஆம்
தேதி வரை பணியாற்றினால் அவர்களுக்கு அதற்கான ஊதியம்
வழங்கப்படும்.

இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு அறையை 044-28449201 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 30,000 பேர் வரை
தேர்வு செய்யப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்
பலர் கொரோனா அச்சம்
காரணமாக இதில் கலந்து
கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதால் அச்சமின்றி அவர்கள் பங்கேற்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments