தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்.,
எம்.எட். நேரடி
சோ்க்கைக்கு கால
நீட்டிப்பு
தஞ்சாவூா்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2021 – 2022 ஆம்
கல்வியாண்டுக்கான பி.எட்.,
எம்.எட். நேரடிச்
சோ்க்கையில் ஆக.
31 ஆம் தேதி வரை
கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) தெரிவித்திருப்பது:
தமிழ்ப்
பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில்
இளங்கல்வியியல் (பி.எட்.)
மற்றும் கல்வியியல் நிறைஞா்
(எம்.எட்.) ஆகிய
இரண்டாண்டு முழு நேரப்
பட்டப்படிப்புக்கான 2021 – 2022 ஆம்
கல்வியாண்டு நேரடிச் சோ்க்கை
ஜூலை 5-ஆம் தேதி
முதல் ஆகஸ்ட் 6- ஆம்
தேதி வரை நடைபெற்றது.
தற்போது,
இந்த நேரடிச் சோ்க்கை
ஆகஸ்ட் 31- ஆம் தேதி
வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுளளது.சோ்க்கை
விண்ணப்பங்களை காலை
10 மணி முதல் மாலை
5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில்
ஆகஸ்ட் 31 ஆம் தேதி
வரை (வேலை நாள்களில்
மட்டும்) நேரிலும் தமிழ்ப்
பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற
இணையதளத்தில் பார்க்கலாம். 04362 – 226720, 227089 ஆகிய தொலைபேசி
எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.