TAMIL MIXER EDUCATION.ன்
வங்கி கடன் செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கடன் முகாம்
தொழில்
செய்ய விருப்பமுள்ள மாற்றுத்
திறனாளிகளுக்கான வங்கி
கடன் முகாம் ஜூலை
16ம் தேதி நடைபெற
உள்ளது.
மாற்றுத்
திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்,
பாரதப் பிரதமரின் வேலை
வாய்ப்புத் திட்டம், வேலையில்லா படித்த இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், சிறுதொழில் மற்றும் பெட்டிக் கடை
வைப்பதற்கான வங்கி கடன்
மானியம் வழங்கும் திட்டம்,
மத்திய அரசின் மாற்றுத்
திறனாளிகளுக்கான பொருளாதார
மேம்பாட்டுத் திட்டம்
மூலமாக கடன் வழங்கும்
திட்டங்களில் மாற்றுத்
திறனாளிகள் பயன்பெறும் வகையில்
‘வங்கி கடன் முகாம்‘
வரும் ஜூலை 16ம்
தேதி காலை 10 மணிக்கு
சேலம் மாவட்ட ஆட்சியரக
வளாகம் அறை எண்.12ல்
நடைபெற உள்ளது.
எனவே,
வங்கி கடன் பெற்று
தொழில் செய்ய விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள் அடையாள
அட்டை நகல், ஆதார்
அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், இரண்டு
பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here