Join Whatsapp Group

Join Telegram Group

பேக்கரிப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி – TNAU

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

பேக்கரிப் பொருட்கள்
தயாரிப்பு பயிற்சி
TNAU

தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப்
பொருட்கள் தயாரிப்பது பற்றிய
2
நாள் பயிற்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

வேளாண் படிப்பு (Agricultural Studies)

கோவையில்
இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை
அறிவியல் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த
பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து
வருகிறது.

தொழில்முனைவோராக மாற (Become
an Entrepreneur)

சான்று
பெற்ற பயிர் ரகங்களை
அறிமுகப்படுத்துவதுடன், அவற்றில்
பூச்சி மற்றும் நோய்
மேலாண்மை, சாகுபடித் தொழில்நுட்பம், அதிக மகசூலுக்கான சூட்சமம்
என விவசாயத்திற்கு இன்றியமையாத விஷயங்களையும் வேளாண்
பல்கலைக்கழகம் கற்றுக்கொடுத்து வருகிறது. அதேநேரத்தில் தொழில்
முனைவோராக மாற வேண்டும்
என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை
வழங்குவதிலும், தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பணி
மகத்தானது.

2 நாள் பயிற்சி (2 days
training)

அந்த
வரிசையில்,அடுமனை உணவுப்பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாட்கள்
பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும்
16.08.22
மற்றும் 17.08.2022 தேதிகளில்
நடத்தப்பட உள்ளது. இதனை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், அறுவடை பின்சார்
தொழில்நுட்ப மையம் ஏற்பாடு
செய்துள்ளது.

அடுமனை
உணவுப் பொருட்களுக்கு (Bakery Products) தற்பொழுது
மக்கள் மத்தியில், அதிக
வரவேற்பு உள்ளது. அதற்கான
முக்கியக் காரணம் விரும்பத்தக்க வகையிலும், பல்வேறு சுவைகளிலும் மிக எளிதில் இவை
கிடைக்கின்றன.வளர்ந்து
வரும் இந்த அடுமனைத்
தொழில்நுட்பங்கள், சிறு
தொழில் முனைவோர், தங்களது
வருமானத்தைப் பெருக்கப்
பெரிதும் உதவியாக இருக்கும்.
இதில் அடுமனைப் பொருட்களான ரொட்டி, கேக் மற்றும்
பிஸ்கட் வகைகள் தயாரிப்பு
தொழில்நுட்பங்கள் குறித்துக் கற்பிக்கப்பட உள்ளது.

சிறப்பு
அம்சங்கள்

ரொட்டி
வகைகள்

கேக்
மற்றும் பிஸ்கட்

பப்ஸ்,
கட்லெட் மற்றும் சமோசா

இவற்றை
எளிய முறையில் தயாரிப்பதற்கானத் தொழில்நுட்பப் பயிற்சி
அளிக்கப்படுகிறது. இந்தத்
தொழில் நுட்பத்தில் ஆர்வமுள்ள
தொழில் முனைவோர் மற்றும்
ஏனைய ஆர்வலர்கள் ரூ.1,770
(
ரூ.1550+18% GST) யை
16.08.2022
அன்றுச் செலுத்தி பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

கூடுதல்
விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை
பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு
வேளாண்மைப்
பல்கலைக் கழகம், கோயமுத்தூர் 641 003 என்ற முகவரியிலும், 0422 6611268 என்ற  தொலைபேசி எண்ணிலும்
தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]