PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிதாக
வீடு வாங்குவோருக்கான முக்கிய
அறிவிப்பு
நாடு
முழுவதும் உள்ள அரசு
மற்றும் தனியார் நிறுவன
ஊழியர்களுக்கு அவர்களது
சம்பள தொகையில் ஒரு
பகுதியை வருங்கால வைப்பு
நிதியாக (PF) சேமித்து வைக்கும்
நோக்கத்தில் பிடித்தம் செய்து
வழங்குவார்கள். அது
குறிப்பிட்ட சில வருடங்களில் ஒரு முழு தொகையாக
இருக்கும். அது புதுவீடு
கட்டுதல், திருமண செலவுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நீண்டகால
அடிப்படையில் இது
நல்ல லாபத்தை தருகிறது.
ஆனால் அந்த பணத்தை
எடுக்க சில நிபந்தனைகள் உள்ளது. அதன்படி:
PF தொகையில்
90 சதவிகிதம் சொத்து பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும். புதிதாக
வீடு வாங்குவோர் அல்லது
நிலம் வாங்கி வீடு
கட்டுவோர் என அனைவருக்கும் இந்த சலுகை வழங்கப்படும். ஆனால் நிலத்தில் புதிதாக
கட்டுவதாக இருந்தால் அந்த
நிலம் பிஎஃப் கணக்குதாரரின் பெயரிலோ அல்லது அவரது
மனைவி / கணவன் பெயரிலோ
இருக்க வேண்டும்.
இந்த
கணக்கில் பணம் எடுக்க
குறைந்தது 5 வருடங்கள் பணம்
சேமிக்க வேண்டும். இந்த
சலுகை தனியார் துறை
உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த பணத்தை
எடுக்க, வீட்டின் விலை
அல்லது பிஎஃப் கணக்குதாரரின் கடைசி 24 மாத சம்பளம்
மற்றும் அகவிலைப்படி இவற்றின்
கூட்டுத்தொகை ஆகிய
இரண்டில் எது குறைவாகவோ
உள்ளதோ அதை எடுக்கலாம். இருந்த போதிலும் 90 சதவிகிதத்திற்கு மேல் எடுக்க முடியாது.