டிஆர்பி தேர்வு
மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்
– இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி
இயக்குநர் (கிரேடு-1), கணினி
பயிற்றுநர்கள் (கிரேடு-1)
ஆகிய பணிகளுக்கான 2,207 காலி
இடங்களுக்கு இன்று முதல்
விண்ணப்பிக்கலாம் என்று
ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.
இதுகுறித்து TRB – ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பள்ளிக்
கல்வித்துறையில் காலியாக
உள்ள பணியிடங்களில் பல்வேறு
பாடங்களுக்கு முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி
இயக்குநர் (கிரேடு-1) , கணினி
பயிற்றுநர்கள் (கிரேடு-1)
நியமிக்கப்பட உள்ளனர்.
1,960 காலிப் பணியிடங்களுடன் ஏற்கெனவே
காலியாக இருந்த 247 இடங்களுடன் சேர்த்து, 2,207 காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
பாடவாரியாக உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்:
தமிழ் – 271
ஆங்கிலம் -192
கணிதவியல் -114
இயற்பியல் – 97
வேதியியல் – 191
விலங்கியல் -109
தாவரவியல் – 92
பொருளாதாரவியல் – 289
வணிகவியல் – 313
வரலாறு – 115
புவியியல் – 12
அரசியல் அறிவியல்
– 14
வீட்டு அறிவியல்
– 03
இந்திய கலாச்சாரம் – 03
உயிர் வேதியியல்
– 01,
உடற்கல்வி இயக்குநர்
(கிரேடு-1) – 39
கணினி பயிற்றுநர்கள் (கிரேடு-1) – 44 என
மொத்தம் 2,207 காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
இதற்கு
விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் மற்றும்
B.Ed. முடித்திருக்க வேண்டும்.
40 வயதினைக் கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
கட்டணம்–
ரூ.500, எஸ்சி, எஸ்டி
பிரிவினருக்கு– ரூ.250.
இதற்கான
தேர்வுகள் நவம்பர் 13, 14, 15 ஆகிய
தேதிகளில் நடைபெற உள்ளன.
இதற்கு ஆன்லைனில் இன்று
(18.09.2021) முதல் விண்ணப்பிக்கலாம். காலிப்
பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி
17.10.2021 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிகள் முழு விவரம் – 2207 Vacancies – Click Here