Join Whatsapp Group

Join Telegram Group

மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் – நாகை

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்

மதிப்புக்கூட்டும் இயந்திர
சேவை மையங்கள் அமைக்க
விண்ணப்பிக்கலாம்நாகை

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நாகை
மாவட்டத்தில் வேளாண்
பொறியியல் துறை சார்பில்
மதிப்புக்கூட்டும் இயந்திர
சேவை மையங்கள் அமைக்க
மானியம் வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது. இதில்,
விவசாயக் குழுக்கள், உழவா்
உற்பத்தியாளா் அமைப்புகள் மற்றும் தனி நபா்
விவசாயிகள் பயன்பெறலாம்.

இத்திட்டம் மூலம், சிறிய பருப்பு
உடைக்கும் இயந்திரம், தானியம்
அரைக்கும் இயந்திரம், மாவு
அரைக்கும் இயந்திரம், கால்நடை
தீவனம் அரைக்கும் இயந்திரம்,
சிறிய வகை நெல்
அரைவை இயந்திரம், நெல்
உமி நீக்கும் இயந்திரம்,
கேழ்வரகு சுத்தப்படுத்தும் இயந்திரம்,
செடியிலிருந்து நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்,
நிலக்கடலை தோல் நீக்கும்
இயந்திரம், எண்ணெய் பிழியும்
இயந்திரம், வாழைநார் எடுக்கும்
இயந்திரம், பாக்கு உடைக்கும்
இயந்திரம் மற்றும் சூரியக்
கூடார உலா்த்தி உள்ளிட்ட
இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை
மையங்கள் அமைக்க 50 சதவீதம்
அல்லது அதிகபட்சமாக ரூ.
5
லட்சம் வரை பின்னேற்பு மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயக்
குழுக்களுக்குக் கூடுதலாக
20
சதவீத மானியம் வழங்கப்படும்.

மேலும்
விவரங்களை https://mis.aed.tn.gov.in/login என்ற
இணையதளத்தில் அறியலாம்.
நாகை, வேளாண் பொறியியல்
துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரில் அல்லது
94422 40121
என்ற எண்ணிலும் தொடா்பு
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]