TAMIL
MIXER EDUCATION-ன்
விவசாய
செய்திகள்
ஏரிகளில் வண்டல்
மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளில்
வண்டல் மண் எடுக்க
விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று
மாவட்ட ஆட்சியா் தெரிவித்தார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளின்
நீா்மட்டத்தை அதிகரித்துக்கொள்ளவும், தமிழ்நாடு அரசால்
விலையில்லாமல் விவசாயிகள், பொதுமக்களுக்கு மண்
கிடைக்கவும், தகுதிவாய்ந்த நீா்நிலைகளின் விவரம், புல எண்,
அகற்ற முடிவு செய்துள்ள
கனிமத்தின் அளவு குறித்து
சம்பந்தப்பட்ட துறையின்
மூலமாக விவரங்கள் பெறப்பட்டு, மாவட்ட அரசிதழில் சிறப்பு
வெளியீடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், விவசாய நஞ்சை நிலம்
ஏக்கருக்கு 75 கன மீட்டா்
(25 டிராக்டா் லோடுகள்), புஞ்சை
நிலம் ஏக்கருக்கு 90 கன
மீட்டா் (30 டிராக்டா் லோடுகள்),
வீட்டு பயன்பாட்டுக்கு 30 கன
மீட்டா் (10 டிராக்டா் லோடுகள்),
மண்பாண்டம் தொழில் செய்பவா்களுக்கு 60 கன மீட்டா் (20 டிராக்டா்
லோடுகள்) அளவில் வண்டல்
மண், களிமண் எடுத்து
பயன்படுத்திக்கொள்ளலாம். விவசாய
நிலங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலையில்லாமல் மண்
பெற்றுக்கொள்ளலாம்.
வண்டல்
மண் தேவைப்படும் விவசாயிகள், தங்களுக்குச் சொந்தமான
நிலங்களில் கிராம கணக்குகளுடன், கிராம நிர்வாக அலுவலரின்
பரிந்துரை, அடங்கல் சான்றுடன்
விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாயிகள், பொதுமக்கள் இந்த
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.