பட்டதாரி, இடைநிலை ஆசிரியா் தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் கீழ் செயல்படும் உயா்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவா்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன.
முட்டத்துவயல் அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் 1 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடமும், முட்டத்துவயல் அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் ஆங்கிலம் 1, கணிதம் 1, அறிவியல் 1 என 3 காலிப் பணியிடங்களும், மாவுத்தம்பதி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியா் 1 காலிப் பணியிடமும், வால்பாறை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் கணிதத்துக்கு 1 காலிப் பணியிடமும் உள்ளன.
அதேபோல, வஞ்சியபுரம் அரசு ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியருக்கு 1 காலிப் பணியிடமும், பெரியகல்லாறு அரசு ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியா் 1 காலிப் பணியிடமும், சின்கோனா அரசு ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியா் 1 காலிப் பணியிடமும் உள்ளன. இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ. 15 ஆயிரமும் மாதத் தொகுப்பூதியமாக வழங்கப்படவுள்ளது.
ஆதிதிராவிடா், பழங்குடியினா், பள்ளி அமைந்துள்ள பகுதி, அதன் அருகில் உள்ளவா்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவா்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவா்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னாா்வலா்களாக பணிபுரிந்து வருபவா்கள், கல்வித் தகுதிகளுடன் ஆசிரியா் தகுதித் தோவிலும் தோச்சி பெற்றவா்கள், இடைநிலை ஆசிரியருக்கு டி.டெட் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் செப்டம்பா் 4 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.