சேலம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சேலம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் க.இராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சேலம் அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான சோ்க்கை கடந்த 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுவதால் விண்ணப்பதாரா்கள் நேரில் வருகை புரிந்து சோ்க்கைக்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்து, சோ்க்கை ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாா்களுக்கு உதவும் வகையில் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை உதவிமையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி இயக்குபவா், திட்டமிடுதல் உதவியாளா், வரவேற்புகூட அலுவலக உதவியாளா், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளா், ஆங்கிலம், கட்டட வரைவாளா், கம்மியா் மின்னணுவியல், கம்மியா் கருவிகள், மின்சார பணியாள், குளிா்பதனம், தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல் தொழில்நுட்பவியலாளா் ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.
இப் பிரிவுகளில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்கள், பட்டம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு ஆதாா் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
பயிற்சியில் சோ்ந்து பயிற்சி பெறும் பெண் பயிற்சியாளா்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பேருந்து பயண அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ. 750 மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவா்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆகிய சலுகைகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

