அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், இந்தாண்டு நேரடி பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத் தில், 10ம் வகுப்பு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நேரடி சேர்க்கை மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் அடிப்படையில், நடைபெறும் இந்த நேரடி சேர்க்கையில், விழுப்புரம் மாவட்டத்தில், அரசு தொழிற் பயிற்சி நிலையம் திண்டிவனம் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவு விபரங்களை தெரிந்து கொள்ள நேரடியாக சென்று தொழிற்பயிற்சி நிலையத்தினை அணுகலாம்.விண்ணப்பதாரர்கள் நேரடி சேர்க்கையில் சேரும் போது, தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை புகைப்படம் 4 மற்றும் இடப்பெயர்வு சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.
தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதம் 750 ரூபாய் உதவித்தொகை மற்றும் மிதிவண்டி, பாடப்புத்தகம், மூடு காலணி, சீருடை, வரைபடக் கருவிகள், ஆடவர் தங்கும் விடுதி மற்றும் இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படும்.
மேலும், பயிற்சியின்போது பிரபல தொழிற் நிறுவனங்களில், வேலைக்கான பயிற்சி, உதவித் தொகையு டன் வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.
இந்த நேரடி சேர்க்கையில் பங்கேற்று, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள லாம். கூடுதல் விபரங்களுக்கு 93801 14610, 80722 17350, 97896 95190 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளது.