TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
தரவு அறிவியல்
பட்டப்படிப்பு திட்டத்தில் சேர
விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை
IIT.யால் துவக்கப்பட்ட, இளங்கலை தரவு அறிவியல்
பட்டப்படிப்பு திட்டத்தில் சேர, மாணவ – மாணவியரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.உலகின் முதல்
இளங்கலை தரவு அறிவியல்
பட்டப்படிப்பு திட்டம்,
சென்னை IIT.யால்
துவக்கப்பட்டது.
பிளஸ்
2 அல்லது அதற்கு இணையான
படிப்பு முடித்த மாணவர்கள்,
அனைவரும் விண்ணப்பித்து, நான்கு
ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்.
இந்த
ஆண்டு வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
வரும்,
21ம் தேதி கடைசி
நாள்.இதில் சேர்ந்து
படிக்க, சென்னை ஐ.ஐ.டி.,
சார்பில் நடத்தப்படும், நுழைவுத்
தேர்வில் பங்கு பெறத்
தேவை இல்லை. அதற்கு
பதிலாக, பிளஸ் 2 அல்லது
அதற்கு இணையான படிப்பு
முடித்த மாணவர்களுக்கு, சென்னை
IIT., மற்றும் தாட்கோ
சார்பில் அளிக்கப்படும், நான்கு
வார பயிற்சி முடிவில்
வரும், தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றால் போதுமானது.இந்த
திட்டத்தில் படிக்க, அறிவியல்,
மனிதவியல், வணிகவியல் போன்ற
அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் வகுப்புகள், இணையதளம் வழியே
நடத்தப்படும். நாடு
முழுதும் உள்ள தேர்வு
மையங்களில், தேர்வுகள் நேரில்
நடத்தப்படுகின்றன.மாணவர்கள்
தங்கள் விருப்ப பட்டப்படிப்பை படித்துக் கொண்டே, சென்னை
ஐ.ஐ.டி.,
வழங்கும் இளங்கலை தரவு
அறிவியல் பட்டப்படிப்பை படிக்கலாம். இதற்கான தகுதிகள், பிளஸ்
2 அல்லது அதற்கு இணையான
படிப்பில் தேர்ச்சி பெற்ற,
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களாக இருக்க வேண்டும்.
படிப்புக்கான செலவை,
‘தாட்கோ‘ கல்விக் கடனாக
வழங்கும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow