சைவ வேத
ஆகம பாடசாலையில் பயிற்சி
பெற விண்ணப்பம் வரவேற்பு
சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது சாதி
வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில் இந்து
சமய அறநிலையத் துறையின்
6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள்
ரூ.1.50 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சைவ வேத
ஆகம பகுதிநேர பாடசாலை
பள்ளியில் 3 ஆண்டு சான்றிதழ்
பயிற்சி வகுப்பு நடந்து
வருகிறது.
விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க
வேண்டும். குறைந்தபட்சம் 5-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவராக,
13 வயது நிரம்பியவராக, அதிகபட்சம் 20 வயதுக்கு மேற்படாமல் இருக்க
வேண்டும். பயிற்சிக் காலம்
3 ஆண்டுகள்.
இதில்
சேர விரும்பும் மாணவர்கள்
சேர்க்கை படிவங்களை கோயில்
அலுவலகத்தில் நேரிலோ,
www.hrce.tn.gov.in என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்தலாம். பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை இணை
ஆணையர் மற்றும் செயல்
அலுவலர், கபாலீஸ்வரர் கோயில்,
மயிலாப்பூர், சென்னை –
600 004 என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும். விண்ணப்பங்கள் வரும்
ஜன 15ம் தேதிக்குள் வந்துசேர வேண்டும்.