HomeBlogசென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள்
அறிவிப்பு

கொரோனா
2
ஆம் அலை தாக்கமானது உலக அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக பல
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும், பல குழந்தைகள் தங்களது
பெற்றோரையும் இழக்க
கூடிய கொடிய சூழல்
உண்டாகி இருக்கிறது.

இந்த
நிகழ்வுகள் எல்லாம் பல
குடும்பங்களை இன்றும்
கூட பாதித்து வருகிறது.
இது ஒரு புறம்
இருக்க, மறுபக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்
தங்களது குழந்தைகளை விட்டு
பிரிந்திருக்க கூடிய
சூழலும், கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் அவர்களது
பெற்றோரை பிரிந்திருக்க கூடிய
நிலையும் உருவாகியுள்ளது.

இந்த
இக்கட்டான காலத்தை சந்தித்து
வரும் பெற்றோர்களின் குழந்தைகளை பாதுகாக்க தமிழக அரசு
ஒரு முடிவெடுத்துள்ளது. அதாவது
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் பெற்றோர்களின் குழந்தைகளை கவனித்து கொள்வதற்கும், அவர்களின் பாதுகாப்பு, உணவு,
தங்குமிடம் போன்ற தேவைகளுக்கு அவசியம் ஏற்பட்டால் அதற்கு
தொடர்பு கொள்ள இலவச
எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்
படி சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றால்
அவர்கள் 1098, 9944290306, 04425952450 ஆகிய
இலவச உதவி எண்களில்
தொடர்பு கொள்ளலாம். மேலும்
இந்த இலவச எண்
மூலம் குழந்தைகளுக்கு தேவையான
மருத்துவ உதவி மற்றும்
அவர்களுக்கு தேவையான உளவியல்
ஆலோசனை குறித்தும் தெரிந்து
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular